இந்திய மருத்துவக் கழகப் பொது நுழைவுத் தேர்வு (NEET)

Tuesday, September 17th, 2013 @ 10:10PM

writing testஇந்திய மருத்துவக் கழகம் இந்த வருடம் முதல் மருத்துவ படிப்புகளுக்கு பல்வேறு மாநிங்களாலும் தனியார் மற்று அரசு மருத்துவ கல்லூரிகளாலும் நடத்தப்பட்டு வந்த நுழைவு தேர்வுகளை நிறுத்திவிட்டு அவற்றிற்கு பதிலாக ஒரே ஒரு தேர்வு மூலம் கல்லூரி சேர்கையை நடத்த திட்டமிட்டது. அதற்காக National Eligibility cum Entrance Test (NEET – நீட்) என்ற பெயரில் தேர்வு நடத்த அறிவிப்பையும் வெளியிட்டது.

இதற்கு இந்திய மருத்துவக் கழகம் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தியது. பல தனியார் கல்லூரிகள் தரமில்லாத மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு சேர்ப்பதை இது தவிர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்க்கு மாணவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நிறைய நுழைவு தேர்வுகளை எழுத வேண்டிய சூழ்நிலை உள்ளது. பல ஊர்களுக்கு பயணம் செய்வதும் அதற்கான செலவுகள் மட்டுமின்றி தேர்வு கட்டணங்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆனது. இது முதுநிலை மருத்துவம் படிப்பதற்கும் பொருந்தும். பல தனியார் மருத்துவ கல்லூரிகள் மாநில அரசின் தேர்வை ஒப்புக்கொள்ளாமல் தனியே  நுழைவு தேர்வு நடத்துவதே இந்த பணத்திற்குதான் எனவும் பேசப்பட்டது. மேலும் இந்த தேர்வு அகில இந்திய அளவில் ஒரு அளவுகோல்  கொடுப்பதன் மூலம் மாநில பாடத்திட்டங்களை மத்திய பாடத்திட்டத்தை போல முன்னேற்ற உதவும் என்பதும் இதற்க்கு சாதகமான அம்சம்.

ஆனால் இதற்க்கு பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்பார்த்ததை போல தனியார் கல்லூரிகள்  எதிர்த்தன. நுழைவுத் தேர்வு என்றாலே கசப்போடு பார்க்கும் தமிழகம் எதிர்த்து. சில மத்திய அரசின் கல்லூரிகளே எதிர்த்தன. அவர்கள் சிரம் வாய்ந்த நிறுவனங்கள் என்றும் இப்படி ஒரு பொதுத்தேர்வு அவர்களது தரத்தை குறைத்து விடும் என்றும் காரணங்கள் கூறின. இது பல மாநில அரசுகளை மேலும் கோபத்தில் ஆழ்த்தியது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதன் தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. இரு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகதிற்கு நுழைவுதேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தனர். ஆனால் ஒரு நீதிபதி அதை மறுத்து நுழைவுத்தேர்வு செல்லும் என அறிவித்தார். எனவே இறுதியில் செல்லாது என முடிவாயிற்று. ஆனால் இது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை கவனத்தில் கொள்ளவில்லை என சில நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு  புது சட்டம் இயற்றுமா அல்லது அப்படியே விட்டு விடுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அகிலன்

Categories: Article, August 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: