நீதித்துறை சீர்த்திருத்தங்கள் – 4

Sunday, September 8th, 2013 @ 12:18PM

CourtGavelசென்ற மாதம் நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையை பார்த்தோம். தேர்வு சரி. தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்க அல்லது குறைந்த பட்சம் அவர்களை நீக்க தற்பொழுது போதுமான அதிகாரம் உள்ளதா? சில நீதியரசர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கும் பொழுது அதற்கான தேவை நிச்சயம் ஏற்படுகிறது.

தற்பொழுது இருக்கும் சட்டப்பிரிவு கூறு 124 (உறுப்புரை 4) செயலற்று போய்தான் உள்ளது. தவறாக நடக்கும் ஒரு நீதிபதியை நீக்க மாநிலங்களைவை மற்றும் மக்களைவையில் பெரும்பான்மை பெற்று, இந்திய குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்கலாம். ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு நீதிபதிகூட இவ்வாறு நீக்கப்படாதது இந்த விதி செயலற்று போயுள்ளதை தெளிவாக காட்டுகிறது. ஒருவரை நியமிப்பது மிக சுலபமாகவும், அவர் தவறு செய்தால் அவரை நீக்குவது முடியாத காரியமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

பாராளுமன்றத்தில் காத்துக் கிடக்கும் நீதித்துறை பொறுப்பு மசோதா (Judicial Standards and Accountability Bill, 2010) இதற்கான வரைவுகளை முன்வைத்துள்ளது.

நீதிபதிகளுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிக்க இரண்டு அதிகார மையங்கள் உருவாக்கப்படும்.
தேசிய நீதி விசாரணை குழு
கலந்தாய்வு குழு

கலந்தாய்வு குழு உச்சநீதிமன்றத்திலும், அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் அமைக்கப்படும். ஒரு முன்னால் தலைமை நீதிபதியும், அந்த நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் அதில் இடம்பெற்றிருப்பார்கள்.

நீதி விசாரணை குழுவில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமைப் பொறுப்பு வகிப்பவராகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், தலைமை வழக்கறிஞரும், குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட மேம்பட்ட ஒருவரும் இடம் பெறுவார்கள்.

கூர்ந்தாய்வு குழு நீதிபதி ஒருவரின் மீது விசாரணை பரிந்துரைத்தால், விசாரணை குழு அந்த புகாரை விசாரிக்க ஒரு குழுவை உண்டாக்கும்.

நீதிபதியின் மீது புகார் நிரூபிக்கப்படும்பட்சத்தில் (1) அவரை தானாகவே விலக கேட்டுக்கொள்ளப்படும். அவர் அதனை மறுக்கும் பட்சத்தில் (2) குடியரசுத் தலைவருக்கு அவரை நீக்க ஆலோசனை தெரிவிக்கப்படும். குடியரசுத் தலைவர் இவ்விசயத்தை பாராளுமன்ற ஒப்புதலுக்கு அளிப்பார்.

நீதிபதி ஒருவரை நீக்க பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு கோரிக்கை கூட கொண்டு வரலாம். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் சபாநாயகரின் எல்லைக்குட்பட்டது.

இது வரவேற்கதக்க ஒன்றாக இருந்தாலும் இதிலும் சில மாற்றங்கள் அவசியம். ஒரு நீதிபதி குற்றம் புரிந்தவர் என்று தெரிந்த மறுகணமே அவர் நீதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் ஈடுபடுவதை தலைமை நீதிபதி தடுக்க வேண்டும். அதே போன்று குற்றம் நீருபிக்கப்பட்டவர் தலைமை நீதிபதியாக இருந்து அவராக பதவி விலக மறுத்தால், குடியரசு தலைவர் அரசியல் சாசன சட்டப்பிரிவு கூறு 223ஐ பயன்படுத்தி அவருக்கு பதிலாக வேறு ஒரு நீதிபதியை தற்காலிக ஏற்பாடாக தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும்.

தவறு செய்யும் நீதிபதிகளை நீக்க வேண்டிய கட்டாயம் இல்லாதபோது அவருக்கு வழங்கப்படும் தண்டனை பொதுவாக இல்லாது தலைமை நீதிபதிக்கும், அவருக்கும் தனிப்பட்டு இருக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பட்சத்தில் அவரை நீக்கிய பிறகே எடுக்கவேண்டும்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்குகள்:

உயர்நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு, மேல் முறையீட்டு ஆட்சி வரம்பு கடுமையாக கட்டுப்படுத்தப்படவேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் வரம்பு அரசியல் சாசன பொருள் விளக்கம் இரு மாநிலங்கள் அல்லது மாநிலத்திற்கும், மைய அரசிற்கும் இடையேயான விவாதங்களுக்கு மட்டும் உட்பட்டதாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் என்பது ஒரு அரசியல் சாசன நீதிமன்றமாகவோ அல்லது மத்திய நீதிமன்றமாக இயங்க வேண்டும்.

மாநில சட்டமியற்றல் தவிர்த்து அரசியல் சாசன பொருள் விளக்கங்களில் உயர்நீதிமன்றம் ஈடுபடுதல் கூடாது. வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், உயர்நீதிமன்றத்தின் புனிதத்தையும், அதிகாரத்தையும் பாதுகாக்கவும் உயர்நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு ஆட்சி வரம்பு கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

வரிவிதிப்பு, பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வேலையாட்கள் தகராறு ஆகியவை சட்ட நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட கூடாது. இவை சிறப்பு தீர்ப்பாயங்களில் தீர்க்கப்பட்டு, அரசியல் சாசன பொருள் விளக்கங்கள் தேவையில்லாத போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்பதற்கு வழிவகை இல்லாமல் செய்யவேண்டும். பொது நல வழக்குகள் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம் குறித்தாக மட்டும் இருக்க வேண்டும். மற்றவை கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஏற்றுக்கொண்டு நீதி வழங்கப்பட்ட மனுக்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

தேர்தல் வழக்குகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 1 வருட காலத்தில் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.

இதுவரை நாம் கண்ட சீர்த்திருத்தங்கள் யாவும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்த 20 ஆண்டுகளில் மக்கள் அரசியல்வாதிகளின் மீது தகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அடுத்த 20 ஆண்டுகளில் அரசியவாதிகள் மக்களின் கேலிப்பொருளாக மாறிய பின்னர், இந்திய குடியியல் பணியாளர்கள் மீது நம்பிக்கை கொண்டனர். அவர்களின் மீதும் உள்ள நம்பிக்கை குறைய மக்களின் ஓரே நம்பிக்கையாக நீதித்துறை மட்டுமே இருந்து வருகிறது. ஆனால் குவிந்து கிடக்கும் வழக்குகளால் நீதித்துறையும் முடங்கி போயுள்ளது. நீதித்துறையின் செயல் திறன், நடுநிலைமை, நேர்மை குறித்தும் தொடர் சந்தேகங்கள் எழுந்து வருகின்றது. நீதித்துறையில், குறிப்பாக கீழமை நீதிமன்றங்கள், அதில் அங்கம் வகிக்கும் நீதிபதிகள் குறித்து இயலாமையும், கவலையும் மக்களுக்கு ஏற்படுகிறது.

இந்த சவால்களை நாம் உடனே எதிர்கொண்டு சமாளிக்காமல் போனால் மக்களின் கடைசி நம்பிக்கையும் இழக்கப்பட்டு, நம் சமுதாயம் ஒரு பேராபத்தை சந்திக்க வேண்டிய ஒரு நிலைமை வரும். நீதித்துறை நாட்டின் ஒரு முக்கிய உறுப்பு என்பதை உணர்ந்து மக்களுக்கு நியாமான, செயல்திறன் கூடிய, பொறுப்பான அமைப்பாக செயல்படவேண்டும். அதன் விசுவாசம் பொது நன்மைக்காகவும், விரைவான நீதிக்காகவும் மட்டும் இருக்க வேண்டும். இதுவரை பதவி வகித்த பல நீதியரசர்கள் நமக்கு நீதித்துறை சுதந்திரமாகவும், பலமற்றதாகவும் இயங்க முடியும் என நீரூபித்துள்ளனர். நாட்டின் மற்ற உறுப்புகளின் நெறி மீறாமல் நீதித்துறையை மேலும் திறமைமிக்கதாகவும், சக்தி நிறைந்ததாகவும் மாற்றும் தருவாய் இதுவே. இது மட்டுமே.

முற்றும்.நீதித்துறை சீர்த்திருத்தங்கள்-4

சென்ற மாதம் நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையை பார்த்தோம். தேர்வு சரி. தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்க அல்லது குறைந்த பட்சம் அவர்களை நீக்க தற்பொழுது போதுமான அதிகாரம் உள்ளதா? சில நீதியரசர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கும் பொழுது அதற்கான தேவை நிச்சயம் ஏற்படுகிறது.

முற்றும்.

Categories: Article, August 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: