லோக் சத்தா திருப்பூர் மாவட்ட செயல்பாடுகள் – செப்டம்பர் 2013

Monday, September 30th, 2013 @ 9:34PM

27-08-2013: திரு. மாரியப்பன் என்பவரின் – யார்ன் டை செய்து கொடுத்து பணம் வராதது
குறித்து புகார் மீது நடவடிக்கை.

31-08-2013: சென்னையில் செயற்குழுவில் பங்கேற்க திருப்ப10ர் மாவட்ட நி;ர்வாகிகள் சென்றனர்.

01-09-2013: (1) திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் தூர்வாறும் சேவையில் பங்கேற்று – (கரசேவை) பங்கேற்றவர்களுக்கு நீர்மோர், தயிர் வழங்கப்பட்டது.
(2) வாராந்திர கூட்டம்.

02-09-2013: (1) திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளில்
(2) விஜயகுமார் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவர் முறையாக இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு. அவர்களின் அறிவுறுத்தல் பேரில் சென்னை மருத்துவதுறை இயக்குநருக்கும் கடிதம்.
(3) மகாலிங்கம் அவர்களுக்கு – சாதிச்சான்றிதழ் – தர காலம் தாழ்த்தியது குறித்து புகார் – உடனடித் தீர்வு.

(4) விழுதுகள் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலர் திரு. ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

03-09-2013: (1) நிதி ஆதார ஆலோசனை கூட்டம்
(2) சேவை பெறும் உரிமை குறித்து – குறும்படம், பாடல், வீதிநாடகம், ஸ்லோகன் தயாரித்தல் குறித்து

04-09-2013: (1) வணிகவரி அலுவலகத்தில் சிடிஓ மீது புகார் – டின் நம்பர் தராமல் காலதாமதம் செய்து தொடர்பாக. ACTO-இடம் புகார் தரப்பட்டு 2 நாளில் தர ஏற்பாடு.

05-09-2013: (1) திருப்பூர் தேசிகன் கேஸ் – பில் தொகையை விட கூடுதல் வசூல் செய்ததை திரும்பப் பெற்றது. டெலிவரி ஆளிடம் இனிமேல் வாங்க மாட்டேன் என ஓப்புதல் கடிதம். அலுவலகத்திற்கு சென்று பில் தொகை மட்டுமே தரவும் என அறிவிக்க வலியுறுத்தி பிளக்ஸ் வைக்கச் சொல்லி வலியுறுத்தல்.
(2) மின்வாரிய ஊழியர் நல்லூர் முத்துசாமி மீது புகார் – இன்று விசாரணை, நடவடிக்கை.

06-09-2013 : (1) காஜா மைதீன் என்பவரின் மின்இணைப்பு துண்டித்தும் மீட்டர் ஓடுவது குறித்த புகார் -கடிதம் நேரில் தந்தும் பெறாததால் – லோக்சத்தா வழிகாட்டுதலில் புகார் பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டுள்ளது
(2) நல்லூர் லைன்மேன் முத்துசாமி மீது புகாருக்கு, விசாரணைக்கு வரச்சொல்லி கடிதம், நேரில் சென்று விளக்க கடிதம் தரப்பட்டது.

07-09-2013 : (1) நடராஜன் என்பவரின் மின்இணைப்பு குறித்து புகார் – லோக்சத்தா சார்பில் இழப்பீடு கேட்டு கடிதம்.
(2) பள்ளிகளில் துப்புரவு பணியாளர் மற்றும் காவலாளி நியமனத்தில் அரசியல் தலையீடு குறித்து கருத்துக்கேட்பு : புதிய தலைமுறை டிவி க்காக திருப்பூர் மாவட்ட தலைவர் திரு. மகாலிங்கம், திரு. விஜயகுமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

08-09-2013 : (1) திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் தூர் வாறும் சேவையில் லோக்சத்தா பங்கேற்று (கரசேவை)

12-09-2013 : (1) திரு. ராஜு – வர்த்மான் திரெட் கம்பெனியில் சம்பள பாக்கி மற்றும் கணக்கு முடித்து வரவேண்டிய பணம் குறித்த புகார் பெறப்பட்டது. லோக் சத்தா தொழிற்சங்கம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறது.

15-09-2013 : (1) இரவு – ஊத்துக்குளியில் நடைபெறும் மாவட்ட தலைவர் திரு. துரை மகளின் திருமண விழாவிற்கு மாநில தலைவர் ஜெகதீஸ், மாநில அ.செயலர். ஈஸ்வரன், மாவட்ட தலைவர் மகாலிங்கம், விசில் ரிப்போர்டர் முத்துபாரதி, சிவக்குமார், டி.விஜயகுமார், எம். விஜயகுமார், சின்ராஜ், தனபால், அசோகன், ரியல் சண்முகம், மற்றும் நகை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

16-09-2013 : (1) மேற்படி திருமண நிகழ்ச்சிக்கு காலை ஊத்துக்குளிக்கு மாநில தலைவர் ஜெகதீஸ், இளைஞர் கோபால்சாமி, மாவட்ட தலைவர் மகாலிங்கம், சென்னை மாவட்ட உறுப்பினர் சேர்க்கை செயலர் பழனிகுமார், திருமூர்த்தி ஆகியோர் சென்று கலந்து கொண்டனர்.

17-09-2013 : (1) 7-9-2013 அன்றைய பி.ஆh.;. நடராஜன் புகார் பிரச்சனைக்கு மின்வாரிய நிலையஅதிகாரியிடம் நேரில் சென்று புகார் தரப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் மகாலிங்கம் மற்றும் மனுதாரர் பி.ஆர். நடராஜன் நேரில் சென்றனர்.

18-09-2013: (1) சூலூர் எல்ஐசி கிளையில் பணம் கையாடல் குறித்த புகார் பற்றிய செய்தி இன்றைய தினமலர் கோவை பதிப்பில் வந்துள்ளது. இதற்கு உதவிய அனைத்து லோக்சத்தா உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

19-09-2013: (1) கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு சென்னையிலிருந்து ஓப்புதல் தகவல் பெறப்பட்டு 22 பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

20-09-2013: லோக் சத்தா கட்சியின் ஓவர்கோட் (மேலங்கி) தைத்து, 50 ஓவர்கோட்டிற்கு ஸ்கிரின் பிரிண்ட் அடிக்கப்பட்டது. (27-09-2013 அன்று சென்னைக்கு பேருந்தில் அனுப்பப்பட்டது.)

22-09-2013: மாநில அமைப்புச் செயலர் மாலை 3.30 மணிக்கு ரயிலில் சென்னை பயணம். (25-9-2013:கன்னியாகுமரி, 26-9-2013:திருச்சி, 28-9-2013:சென்னை)

25-09-2013: திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் 1997ல் கட்டப்பட்டு செயல்படாமல் இருந்த கட்டிடங்களை உபயோகப்படுத்தக்கோரி லோக் சத்தா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் குறைத Pர்ப்பு நாளில் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, 2013-14ஆம் ஆண்டிற்கான செயல்முறை ஆணை ( பள்ளி செயல்படுவதற்கு) வெளியிடப்பட்டுள்ளது.

27-09-2013: திருப்ப10ர் முதலிபாளையம் பகுதியில் ஹவுசிங் யூனிட் – வீட்டுமனை ஒதுக்கீடு சம்பந்தமாக லோக் சத்தா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்ப்பு நாளில் வழங்கப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை கோரி கோவை மண்டல செயற்பொறியாளரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. (திரு. பால்பாண்டியன்)

DSC0659329-09-2013: சேவை பெறும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி முகாம் – திருப்பூர் லோக் சத்தா கட்சி அலுவலகத்தில் காலை 11.45 லிருந்து 12.45 வரை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் திரு. மகாலிங்கம், தொழிற்சங்க மாநில செயலர் திரு.பால்பாண்டி, தொழிற்சங்க துணை செயலர் திரு. திருமூர்த்தி, மாவட்ட கள செயலர் திரு. சின்ராஜ், மாநகர செயலர் திருமதி. பிரியா, திரு. சண்முகசுந்தரம் (நகை), திரு. பழனிசாமி மற்றும் விசில் ரிப்போர்டர் திரு. எஸ்ஏ. முத்துபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். மதியம் 1.00 மணி அளவில் வந்த மேலும் 8 பேர்களுக்கு (காளிமுத்து, வெங்கடேஷ், சண்முகசுந்தரம், விஜயகுமார், அசோகன், மதனகோபால், பாலாஜி, லோகநாதன்) சேவை பெறும் உரிமை சட்டம் பற்றிய விளக்கம் திரு. சின்ராஜ் அவர்கள் அளித்தார்.

30-09-2013: சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தக் கோரி – நாளை (30.9.2013 திங்கள் அன்று ) திருப்ப10ர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

(இத்துடன் செப்டம்பர் மாத நிகழ்வுகள் முடிந்தது)
மற்றவை அடுத்த மாத நிகழ்வுகள் பட்டியிலில் இடம்பெறும்

Categories: Activities, September 2013, Tirupur News
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: