பயணிப்போர் உரிமைகள் இயக்கத்தின் தொடக்கக் கூட்டம்

Tuesday, November 12th, 2013 @ 8:29AM

பயணிப்போர் உரிமைகள் இயக்கத்தின் தொடக்கக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ஜூலை 26ஆம் நாள் லோக் சத்தா கட்சியின் அலுவலகத்தில் சிறப்பாக நடந்தது. அது குறித்த குறிப்புகள் பின்வருமாறு.
பங்கேற்பு: லோக் சத்தாவின் சார்பாக குமார், ஹானஸ்ட் பழனிக் குமார், அசோக் ஆகியோரும், நேதாஜி தொழிற் சங்கத்தின் சார்பாக தளபதி, அன்பழகன் மற்றும் மேலும் பத்து பேரும், சமூக ஆர்வலர்கள் அழகர் செந்தில்(போரூர்), திரு.வெங்கட நாராயணன்(அடையார்), புவன்(கோடம்பாக்கம்), அலெக்ஸ்(சைதை), சாய் யசோதரன்(சைதை), ரமேஷ்(அண்ணா நகர்), குமார்(T.Nagar) ஆகியோரும் கலந்து கொண்டனர்

குறிப்புகள்:

1) முதலில் விபத்துக்கள் குறித்த Transparent சென்னையின் ஆய்வு மற்றும் அதிகரிக்கும் கார்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

முக்கிய தகவல்கள் பின்வருமாறு:
• உலக அளவில் இந்தியாவும்(>1,40,000), இந்திய அளவில் தமிழகமும் (>16000) விபத்தில் முன்னணி வகிக்கின்றன
• 2010-இல் விபத்துக்களில் இறந்தவரில் 43% சதவீதம் பேர் பாதசாரிகளே
• இறப்பவர்களில் 63% சதவீதம் பேர் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்
• வளர்ந்த நாடுகளில்(அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களாக) விபத்துக்கள் குறைக்கப்பட்டு வருகையில் இங்கு விபத்துக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது.
• இந்தியாவின் எரிசக்தி தேவையில் 85% இறக்குமதி செய்யப்படுகிறது. இது 2030-இல் 90% ஆகும். இது உறுதியற்ற நிலையில்தான் உள்ளது. இறக்குமதி சார்ந்து இருப்பது குறைக்கப்பட வேண்டும். கார்கள் அதிகரித்து நெரிசல் ஏற்படுவது இதை மேலும் அதிகரிக்கிறது. நெரிசலால் டில்லியில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் பணம் விரயமாவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
• PM10 எனப்படும் காற்றில் உள்ள நச்சின் அளவு அனுமதிக்கத்தக்க அளவான 20-வை விட நம் நகரங்களில் பன்மடங்கு அதிகமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது(கான்பூர்/டில்லி-200, சென்னை-50). PM2.5 எனப்படும் மிக கொடிய நச்சும் (டீசல் பயன்பாட்டால் வெளியாகும் இது, குழந்தைகளில் ஆஸ்துமா மற்றும் பல்வேறு மூச்சு கோளாறுகளின் நேரடி காரணி) நம் நகரங்களில் அனுமதிக்கப்ட்ட 20வை விடப் பல மடங்கு உள்ளது(கான்பூர்-200, டில்லி-300, சென்னை-60). இந்த நச்சை மானியப்படுத்துவது தான் டீசல் மானியம் – டீசல் கார்கள் அதிகரித்ததற்கு இந்த மானியம் முக்கிய காரணம். பல வளர்ந்த நாடுகளில் கார்களில் டீசலுக்குத் தடையே உள்ளது.
• கட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால் 2025-இல் கார்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளது கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் காற்று மேலும் மாசுபட்டு, சுவாசிக்கத் தகுயற்றதாகி விடும் அபாயம் உள்ளது.
• சீனா, லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நம்மை விட பணக்கார இடங்களில் கார்களுக்கு அதிக சுங்க வரி, நெரிசல் கட்டணம், கட்டாய பார்க்கிங் லைசென்ஸ், பார்க்கிங் கட்டணம், கட்டுப்படுத்தப்பட்டு ஏலம் விடப்படும் கார் லைசென்ஸ் போன்ற பலவித முறைகளில் கார்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு கார்களின் விலையை விட, வரிகள் அதிகம். அந்த வரிப்பணம் பொது போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
• குறைந்த வருமானம் உள்ள நம் நகரங்களோ இது பற்றி சிறிதும் சிந்திக்காமல் அதிக கார்கள் பயன்படுத்த அனுமதித்து பொது பணத்தில் மேலும் மேலும் சாலைகளை அதிகரித்து வருகின்றன. பொதுப் போக்குவரத்தில் தேவையான கவனம் செலுத்துவில்லை. அதனால் பல பணக்கார நாடுகளைக் காட்டிலும் நம் நகரங்களில் விகிதாச்சார அடிப்படையில் கார் வைத்திருப்போர் அதிகமாக உள்ளனர். இது முற்றிலும் முரண்பாடான, நாட்டின் வளர்ச்சிக்கு பெறும் முட்டுக்கட்டை விதிக்கும் கொள்கை.

2) பின்னர் இயக்கம் என்ன பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டது. பின்வரும் விஷயங்கள் முன் வைக்கப்பட்டன.
வெங்கட்:
ஸ்பீட் லிமிட் போன்ற பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு ஏற்றவாறு இல்லாமல் இருப்பது, விதிகளை செயல்படுத்துவதற்கு தடையாக உள்ளது விதிமீருபவர்களை நிறுத்தி நீண்ட நேரம் தாமதப்படுத்தி தண்டித்தல். இயக்கத்தின் நடவடிக்கைகள் யாருக்கும் அநீதி இளைப்பதாக இல்லாமல், தவறு இருப்பினும் அதன் மூல காரணத்தை அறிந்து அதை தடுப்பதாக இருக்க வேண்டும். அதிகமான எண்ணிக்கையில் உள்ள கல்லூரி பேருந்துகள் பல வித விதி மீறல்களில் ஈடுபடுகின்றன.

CRM Photo

அழகர் செந்தில்:
போக்குவரத்து பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும. அதற்காக போராடி பல வெற்றிகளை போரூரில் கண்டுள்ளேன். ஐடியா மணி என்ற பெயரில் டிராபிக் இணையத்தில் புகாரலை தொடர்ந்து அளித்து வருகிறேன். தரமற்ற ஹெல்மெட், கண்ணாடி போன்றவற்றை ஒழித்துள்ளேன், டோல் சாலைகளை கட்டண முறைகேடுகள், பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல், ஊர்வலம் சென்று கோரிக்கைகளை ஆணையரிடம் அளித்தல். கலூரிகளுக்கு தினம் தோறும் நீண்ட தோறும் மாணவர்கள் பயணம் செய்யும் நிலை மாற வேண்டும். குருகுல முறை போல இருக்க மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் – நேர விரையமும் சோர்வும் தவிர்க்கப்படும்.

நேதாஜி தொழிற் சங்கம் முன்வைத்த முக்கிய MTC தொடர்பான மற்றும் பொதுமக்கள் பிரச்சனைகள்:
1) ஊழியர்களுக்கான கழிப்பறைகளில் சுகாதாரக் கேடு
2) ஊழல் காரணமாக சட்ட விரோதமான பணி உயர்வுகள்.
3) பணி இடைவேளைக்கு நேரம் ஒதுக்கப்படாமை.
4) இன்றைய சாலை நெரிசலில் நடைமுறை படுத்த முடியாத பழைய நேர அட்டவணை – அதனால் அதிக நேர வேலை – 12 முதல் 20 மணி நேர, ஓட்டுனர் நடத்துனர் மிகவும் சிரமத்திற்கும் அழுத்தத்திற்கும் உள்ளாக்கும் வேலை
5) பேருந்து வசூலில் சூப்பர்வைசருக்கு ஊக்க தொகை – அதனால் பராமரிப்பு தவிர்க்கப்பட்டு பாழாகும் பேருந்துகள்
6) பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்கள், குப்பைத்தொட்டிகள் போன்ற பல்வேறு இடையூறுகள். இதனால் ஓட்டுனருக்கு மன அழுத்தம்.
7) வால் டாக்ஸ் ரோடு போன்ற நேரிசலான சாலைகளில் லோடு வேன்கள் சட்ட விரோதமாக நிறுத்தப்படுதல்.
8) சென்ட்ரல்/GH அருகில் தவறான இடத்தில் பேருந்தகளை நிறுத்தக் கட்டாயப்படுத்துதல்.
9) பெரிய பேருந்து நிலையமான சி.எம்.பி.டி-யில் வழித் தடம் குறிக்கபடாததால் அல்லல் படும் பயணிகள்.

இயக்கம் கட்சியின் கீழ் மட்டும் இயங்குமா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. லோக் சத்தா கட்சி ஜனநாயகத்தை பெரிதும் மதித்து செயல்படும் கட்சி, இயக்கத்திலும் அது போலவே பங்கேற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு தற்போது தலைமை வகிக்கும் என்றும் அனைவருக்கும் செயல்பாடுக்கு ஏற்ப இயக்கத்தில் பங்கு உண்டு என்றும் விளக்கப்பட்டது. இயக்கத்தில் உள்ள கட்சிகளுக்கோ, அமைப்புகளுக்கோ இயக்க “பொது” செயல்பாடுகளில் பங்களிப்புக்கு ஏற்ற முன்னிலை அளிக்கப்படும் என்றும், பின்னாளில் இயக்கம் வளரும் போது ஜனநாயக முறைப்படியே தலைவர், செயலாளர்கள் மற்றும் பிற பதவிகள் அமைக்கப்படும் என்றும் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பல உபயோகமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், பயணிப்போர் உரிமைகள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. பின்னொரு நாளில் இயக்கம் மீண்டும் கூடி மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க உடன் எடுக்க வேண்டிய முக்கிய செயல்பாடுகளை முடிவு செய்யும்.

நன்றி

அசோக் ராஜேந்திரன்
தலைமைக் குழு – பயணிப்போர் உரிமைகள் இயக்கம்
பொருளாளர் – லோக் சத்தா கட்சி தமிழ்நாடு

Categories: Article, August 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: