நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

Monday, November 11th, 2013 @ 7:54PM

நுகர்வோர் என்பவர் யார்?

நாம் எல்லோரும் நுகர்வோரே ஏனென்றால் நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்கும் விலை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ்  2(1)(d)  பிரிவின்படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள் ஆவர். குழைந்தைக்கு பால்புவடர் தந்தை காசு கொடுத்து வாங்கினாலும் அதை அனுபவிக்கும் குழைந்தைதான் நுகர்வோர். எனவே பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிருந்து அந்த பொருளை அனுபவிப்பவர் நுகர்வோர்.

consumer-protection

தரமற்ற பொருள் என்றால் என்ன?

சிறிய அல்லது பெரிய குறைபாடு, முழுமை பெறாத, தரக்குறைவான, எடைக்குறைவான இந்திய பொருட்பாதுகாப்பு சட்டங்களுக்கு உட்படாததான பொருட்கள்.  பொதுவாக ஓர் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பொருட்களுக்கு உத்தரவாதம் அவைகளின் தரத்திற்கு கொடுக்கப்ப்டுகிறது. இந்த உத்தரவாத ஆண்டுகள் முடிவதற்கு முன் பொருட்களில் தரக்குறைவு கண்டால் அது தரமற்ற பொருள் வரிசையில் சேர்க்கப்படும்.

சேவை குறைபாடு என்றால் என்ன?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-இல் பகுதி 2(1)(g) பிரிவின்படி காசு கொடுத்து சேவை பெற்றுக் கொள்வது சேவையில் வாக்களித்தப்படி சேவை கொடுக்கப்படாமல் இன்னலகளுக்கு ஆளாக்குவது. உதாரணமாக பேருந்து பயணத்தின் போது காசு கொடுத்தே பேருந்தில் பயணிக்கிறோம் அவ்வாறு பயணிக்கும்போது ஓட்டுனர், நடத்துனர் நம்மை தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் போது அது சேவை குறைபாடு ஆகிறது. இதில் தொலைபேசி காப்பீடுகள், மருத்துவம், அஞ்சலகம், போக்குவரத்து சேவைகள். உணவு விடுதி சேவைகள் உள்ளிட்ட, பணம் கொடுத்து பெறும் அனைத்து சேவைகளும் அடங்கும். ரேசன் கடையில் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களில் குறைபாடு இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். அரசு மருத்துவமனையில் சேவை குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக முடியாது(இலவசமாக பெறுவதால்) மேலும் அரசு மருத்துவமனையில்  பணம் கொடுத்து பெறும் மருத்துவத்துக்கு நீதிமன்றத்தை நாடலாம்.

புகார் எங்கே செய்ய வேண்டும்

கோரும் நஷ்ட ஈட்டுத்தொகை ரூபாய் 20 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு குறைவாக இருந்தால் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்திடமும் நேரிடையாக புகார் செய்யலாம்.

புகாரை வாதாட வழக்கறிஞர் தேவையா?

தேவையில்லை. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மிக முக்கிய அம்சமே வழக்கறிஞ்ர் தேவையில்லை என்பதுதான். இதன் மூலம் நுகர்வோர் தங்கள் புகார்களை மிகச்சிறந்த முறையில் நுகர்வோர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன் வாதிடலாம்.

பணம் கொடுத்து பெறும் பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது சேவை பெறுவதில் குறை இருந்தாலோ நேரிடையாக நாம் நுகர்வோர் நீதிமன்றங்களை அனுகலாம். எப்படி அனுகுவது எதிர் தரப்பினருக்கு நோட்டிஸ் அனுப்பும் வழி முறைகளை அடுத்த இதழில் பார்போம்.

–          மேலும் விவரங்களுக்கு லோக் சத்தா கட்சியை தொடர்பு கொள்ளவும்.

சிவ.இளங்கோ

Categories: Article, September 2013, Whistle
Tags:

1 Comment to "நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் " add comment
anbazhagan
August 17, 2015 at 7:04 pm

Urgently i need Tamil speaking lower
contact no:9626922732

Leave a Reply

%d bloggers like this: