அதிகரித்து வரும் தற்கொலைகள்

Monday, November 18th, 2013 @ 11:06AM

விரக்தியின் எல்லையில் எடுக்கும் உடனடி முடிவுதான் தற்கொலை…
தமிழ் நாடுதான் தற்கொலை சதவீதத்தில் முன்னணியில் இருப்பதுதான் அந்தச் செய்தி..அதிலும் இந்திய அளவில் தற்கொலைகள் 0.1 % குறைந்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் 6% அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது…அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இரண்டாமிடம்…அதிர்ச்சிகரமான இன்னொரு தகவல் 73.5 % பேர் திருமணமானவர்கள்.கேரளா போன்ற மாநிலங்களில் தற்கொலை தடுப்பு முயற்சியின் காரணமாக அங்கு தற்கொலைகள் குறைந்துள்ளன. …பொதுவாகவே தெற்கு மாநிலங்களில்தான் தற்கொலைகள் அதிகம்… இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது தற்கொலை செய்து கொண்டவர்கள் பதினாறு பேர் என்றும் அதில் பதினான்கு பேர் தமிழ்நாடு, ஒருவர் ஒரிசா, மற்றவர் மலேசியா என்றும் சொன்னார்.

suicide-pic-2

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரிசாவிலும் மலேசியாவிலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் அந்தப் பகுதியினர் அல்லர்.
அவர்களும் தமிழ்நாட்டிலிருந்து போனவர்கள்…… தமிழகத்து அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாத என்.டி.ராமாவின் பதவிக் கவிழ்ப்பு நிகழ்ந்தபோது அவரது ஆந்திரத்தில் ஒருவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது அதிர்ச்சியாக இல்லையா?

ஜாதித்தலைவர்கள், சமயவாதிகள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் தற்கொலையைத் தூண்டுகிறார்கள்.தன்பொருட்டுத் தீக்குளித்தோருக்கு, நாவறுத்தோருக்கு, தற்கொலை செய்ய முயன்றவருக்கு, அவர்களின் பரம்பரைக்குப் பணம், பதவி, பட்டம் தருவதன் மூலம் தற்கொலை ஊக்குவிப்புத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கிறோம் என்று அவர்கள் உணரவேண்டும்.

அடுத்த தலைமுறையை அறுத்தெரியும் எந்தத் தலைமையையும் இனி ஆதரிக்கக்கூடாது என்று தீர்மானித்தால் நாடு உருப்படும்.

தற்கொலைக்கான காரணங்கள் :

** விரக்திக்கு பெரும்பாலும் மன நோய்கள் காரணமாக அமைகின்றது.. ஏனெனில் மன அழுத்தம் (depression), இரு முனையப் பிறழ்வு(bipolar disorder), எண்ணப் பிறழ்வு (schizopherenia) ஆகிய மன நோய்களின் தன்மைகளின் ஒன்றான மன ஓட்டங்கள் (mood swing) விரக்தி நிலைக்குக் கொண்டு செல்கிறது.

** குடி ,போதை பழக்கத்திற்கு அடிமையாதல்

** வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல்

** இணக்கமான உறவுகளின் ஈடு செய்ய முடியாத இழப்பு

** தாங்க முடியாத உடல் மற்றும் மன வேதனை…

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலிருப்பவரை அறிந்து கொள்ள சில வழிமுறைகள்:

**மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்
** குடும்பத்தினரிடமிருந்தும் நண்பரிடமிருந்தும் விலகுதல்
** எப்போதும் கவலையோடிருத்தல்
** சுற்றி நடக்கும் எந்த நிகழ்விலும் ஆர்வமின்மை
** சுறுசுறுப்பு இல்லாத இயக்கம்
** தூக்க நிலைகளில் மாற்றம்
**உடல் எடை மாற்றம், பசித் தூண்டல்களிலும் மாற்றம் (அதிகம், குறைவு இரண்டுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்)
** ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றிருத்தல்
** தன் உடமைகளாய் கருதுவதை சரியாக கொண்டு சேர்க்க முற்படுதல்(உயில் எழுதுதல், இன்சூரன்ஸ் முதலியவைகளை நேர்ப்படுத்துதல்)

இது போன்ற அறிகுறிகளை வைத்து தற்கொலை முடிவு எடுத்தவர்களை அறிந்து அவர்கள் அதிலிருந்து மீள உதவலாம்.

எப்படி உதவலாம்..

நமக்குத் தெரிந்த யாரேனும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கின்றனர் என உணர்ந்தால் அவர்களுடன் பேசத் தயக்கம் கொள்ளாதீர்கள். தன் பிரச்சனை குறித்து பேசும்போது அவர்களுக்கு மாற்று யோசனைகள் தோன்ற வாய்ப்பு கிடைக்கும். தன் சுமையை தானே சுமக்கிறோம் எனும் எண்ணத்திலிருந்து விடுபடுவர். அவர்களுக்கு எடுத்தவுடன் நம் அறிவுரைகளைத் திணிக்காமல் அவர்கள் இயல்பிலேயே பேச விடுங்கள். அவர்களின் எண்ணத்தை ஏற்காவிடில் தனக்கு தனிமைதான் நிதர்சனம் எனும் எண்ணம் அவர்களுக்குள் தோன்றிவிடும்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவருக்கு தனக்கு யாருமில்லை எனும் எண்ணத்தைக் கொடுப்பதைவிட உனக்கு நாங்களிருக்கிறோம் எனும் எண்ணம் திடமாகும் வண்ணம் பேசுங்கள்… வெளிப்படையான பேச்சு பல்வேறு மனக் குழப்பங்களிலிருந்து அவர்களுக்கு விடுதலையளிக்கும்.

தற்கொலை எண்ணம் கண்டிப்பாக இருக்கிறது எனத் தெரிந்தால் சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகவே அது குறித்து விசாரியுங்கள். செய்யும் முறைகளும் அதனால் ஏற்படக்கூடும் விபரீதங்கள் குறித்தும் விவாதியுங்கள்.

நம்மால் முடியாதென்று நினைத்தாலும் தற்கொலை ஒழிப்பிற்காக இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் பேசச் சொல்லலாம்

Categories: Article, August 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: