இருளில் மூழ்கிய பாதுகாப்பற்ற மந்தவெளி பகுதி தெருக்கள்

Tuesday, December 17th, 2013 @ 6:47PM

மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை என்று எங்களுக்கு வந்த புகாரை அடுத்து லோக் சத்தா கட்சி மகளிர் அணி உறுப்பினர்களும், தொகுதி நிர்வாகிகளும் சேர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்தோம். பிரச்சனையின் தீவிரமும் மாநகராட்சி பொறுப்புடன் செயல்படவில்லை என்பதும் அதில் தெரிய வந்தது. எனவே இது குறித்து புகார் கொடுத்ததுடன், பிரச்சனை தீரும் வரை போராடுவதென முடிவு செய்துள்ளோம்.

ஆய்வு விவரம்

  1. பட்டினப்பாக்கம் PRO குவார்ட்டர்சில் இருந்து மந்தவெளி செல்லும் வழி விளக்குகள் அறவே இல்லாமல், பெண்கள் இரவில் பயன்படுத்தவே முடியாத நிலையல் இருப்பது தெரிந்தது. மேலும் கோர்டேர்ஸ் உள்ளேயும், இரண்டில் ஒரு விளக்கே எரிவது கண்டறியப்ப்பட்டது.
  2. மந்தவெளிப்பாக்கம் நார்டன் தெறு, டிரஸ்ட் கிராஸ் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் பாதி விளக்குகள் எரியவில்லை. நார்டன் மூன்றவது தெரு போன்ற சில தெருக்கள் கும்மிருட்டில் மூழ்கியுள்ளன.
  3. மந்தவெளியின் பல பிற பகுதிகளிலும் இதே நிலை தான்.
  4. பல பகுதிகளில் தெரு விளக்கு எரிந்தாலும் மரக்கிளைகளை மாநகராட்சி சீர் செய்யாததால், விளக்குகள் மறைபட்டு எரிந்தும் வெளிச்சம் கிடைக்காமல் போகிறது.

பெண்கள் பாதுகாப்பில் சிரிதும் அக்கறை இன்றி மிகுந்த அலட்சியப்போக்குடன் மாநகராட்சி செயல்படுவதையே இது காட்டுகிறது.

அடையார் மற்றும் தேனாம்பேட்டை கோட்டத்தில் தெரு விளக்குகளுக்கு செய்த பணி விவரங்களை வெளியிட்டு, மாநகராட்சி வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட வேண்டும். மேலும்
எங்கள் மனு மீதும், பணியில் அலட்சியம் செய்த அதிகாரிகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து நிலைமையை உடன் சீர் செய்து மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டுகிறோம்.

புகாரின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் விளக்குத் தூண் எண்கள் கொண்ட புகைப்படங்கள் இங்கே – https://www.facebook.com/media/set/?set=a.641745865882970.1073741828.162954957095399&type=3

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: