அசத்தல் ஆம் ஆத்மி! யோசிக்கவும் மோடி!! எங்கே ராகுல்?

Friday, December 27th, 2013 @ 2:43PM

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அனைத்து அரசி யல் கட்சிகளுக்கும் பலவிதமான பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன. மக்கள் மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் மாநில அரசின் சாதனைகளை அங்கீகரித்து மீண்டும் ஒருமுறை ஆட்சி செய்ய வாய்ப்பளித்துள்ளனர். காங்கிரஸ் எதிர்ப்பு அலை மற்றும் பிரதேச காங்கிரஸ் பிரச்சனைகள் இராஜஸ்தானில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வரும் காலங்களில் சந்திக்க இருக்கும் நிதர்சன உண்மை நிலையை உணர்த்தியுள்ளன. மத்திய பிரதேசம் – சட்டீஸ்கர் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் 45% வரை வாக்குகள் பெற்ற பிஜேபி. டில்லியில் 34% மட்டுமே பெற்றுள்ளது. டில்லி அறிமுக தேர்தலில்  31% வாக்குகளைப் பெற்று ஷீலா தீட்சித்தை 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பொறுப்பான எதிர்க்கட்சியாக இருப்போம் என்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை நாட்டு மக்கள் பெரிதும்
எதிர்பார்த்த நல்லதொரு மாற்றம்.

கட்சிகள் பெற்ற இடங்கள்

டில்லியில் ஏற்படுத்திய தாக்கத்தை பிற மாநிலங்களில் ஆறு மாதங்களில் ஏற்படுத்துவது ஆம் ஆத்மி கட்சிக்குள்ள மிகப்பெரிய சவால்.தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பலத்தை உணர்ந்து தன் கொள்கையை ஒற்ற கட்சி களுடன் கூட்டணி வைத்து 2014 தேர்தலை ஆம் ஆத்மி கட்சி சந்தித்தால் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதொரு நெருக்கடியைத் தர முடியும்.

5 State Elections
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் கட்சி ஆரம் பித்து வெற்றியும் பெற்று நாளடைவில் கொள்கை மறக்கும் கட்சிகள் போல் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சி இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். டில்லியைப் போன்று மும்முனைப் போட்டியை 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும், பிஜேபியும் சந்திக்கக் கூடும். டில் லியைப் போல் 34% வாக்குகளைப் பெற்றால் நாட்டின் சிரத்தன்மைக்கு நல்லதல்ல. தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து நாடு எதிர்கொள்ள வேண்டிய சவால்களை விவாதிப்பது மோடிக்கும், பிஜேபிக்கும் நல்லது. மருந்துகள் பல இருந்தும் நோய் என்னவென்று தெரியாத நிலை காங்கிரஸின் துயரம். பிஜேபி போல் இல்லாமல் நல்லதொரு எதிர்க்கட்சியாக தன்னை தயார் படுத்திக்கொள்வது இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரஸ் கட்சிக்கு உதவும். இல்லையெனில் தமிழ்நாடு, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிலைமை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பல சுவாரஸ்யமான தீர்ப்புகளை அரசியல்வாதி களுக்கு தர காத்திருக்கின்றனர். மக்கள் விரும்
புவது ஆட்சியாளர்கள் மாற்றம் அல்ல, ஆட்சி
முறை மாற்றம்…

சில கசப்பான உண்மைகளும், சில நன்மைகளும்

  • மிசோராமில் வெற்றி இராகுலின் வெற்றி என்று அறிக்கை விடாத காங்கிரஸ்.
  • சட்டீஸ்கரில் பிஜேபிக்கு பெரும்பான்மை அளித்து முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய தர்ம சங்கடத்திலிருந்து காங்கிரஸ் தப்பித்தது.
  • 165 இடங்களில் வென்று இமாலய வெற்றி யின் மூலம், திரு.மோடி அவர்களுக்கு நிகராக (மூன்றாவது வெற்றி) திரு.சிவராஜ் சவுகான் தன்னை நிலை நாட்டியிருப்பது.
  • ஏற்காடு இடைத் தேர்தலில் NOTA-வில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4,400. மாற்று அரசியலை முன் வைக்கும் அரசியல் கட்சிகள் கவனிக்க.

– நாகராஜ்

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: