தீபாவளி பண்டிகை – சொந்த ஊர் செல்பவர்களின் நிலைமை

Friday, December 27th, 2013 @ 8:01AM

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி கோயம்பேடு பேருந்து நிலைத்தில் சில லட்ச மக்கள் கூடினார்கள். அந்த கூட்ட நெரிசலில் மக்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் நேரிடாமல் இருக்க காவல் துறை Asst. Commissioner  திரு. செந்தில் குமரன், மூன்றாவது சக்தி பாலு ஐயா அவர்களிடம் பொது மக்களுக்கு உதவும்படி அழைப்பு விடுத்தார். எனவே அந்த அழைப்பை ஏற்று 3-வது சக்தி சார்பாக பொது மக்க்ளின் உதவிக்கு தீபாவளிக்கு 3 நாட்கள் முன்னம் இருந்தே அதாவது 29,30 அக்டோபர் 2013 மற்றும் 1 நவம்பர் 2013 நாட்களில் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றோம். முதல் நாள் 29,அக்டோபர் 2013 அன்று இரவு 7 மணிக்கு சுமார் 40 சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடினோம். அன்று மக்கள் கூட்டம் நெரிசல் குறைவாகவே இருந்த்து. அங்கே காவல் துறையைச் சேர்ந்த Asst. Commissioner மற்றும் பேருந்து நிலைய அதிகாரிகள் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் அதற்கு என்னென்ன தீர்வுகள் கொடுக்க முடியும் என்று விளக்கி கூறினார்கள். சுமார் 8 மணி அளவில் ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் ஐந்து ஐந்து பேராக பிரிந்து மக்களுக்கு உதவிகள் புரிந்தோம். காவல் துறையினரும் 3 குழுக்களாக செயல் பட்டு அதாவது ஒவ்வொரு குழுவிலும், ஒரு போலிஸ் அதிகாரி, பேருந்து நிலைய அதிகாரி மற்றும் நேர காப்பாளர் என்று ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் அமர்ந்து பிரச்சனை என்று வரும் மக்களுக்கு மைக் மூலம் உதவிகள் புரிந்தனர்.

சேலம் மற்றும் வேளாங்கண்ணி மார்க்கத்தை தவிர மற்ற அனைத்து மார்க்கத்துக்கும் செல்லும் பேருந்துகள் சிறு, சிறு தாமத்ததுடன் சிறப்பாக சென்றது.

30-ந்தேதி வியாழன் அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம். ரிசர்வேஷன் கவுண்டரிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. வெளியே செல்லவேண்டிய 7 மணி மற்றும் 7.30 மணி பேருந்துகள் வெளியே செல்ல முடியாமல் ரிசர்வேஷன் இல்லாமல் செல்லும் மக்கள் வழியை மரித்து வெளியே போக வேண்டிய பேருந்துக்களை தடுத்துக் கொண்டிருந்தார்கள். அனால் 9-மணிக்கு போக வேண்டிய பேருந்துக்கள் உள்ளே வநது விட்டது. பேருந்து நிலைய அதிகாரிகள் உள்ளே வரவேண்டிய பேருந்துக்கள் ட்ராபிக் ஜாமினால் பேருந்து நிலையத்திற்கு வெளியே 500 பேருந்துக்கள் சாலைகளில் நிற்பதாக சொன்னார்கள். பேருந்து நிலையத்திற்குள்ளேயும், வெளியேயும் ஒரே ட்ராபிக் ஜாம் ஆகி ஸ்தம்பித்து விட்டது. போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒன்றும் செய்வதரியாது இருந்தார். சமூக ஆர்வலர்கள் உள்ளே சென்று பேருந்துக்களை வெளியே செல்ல முடியாத அளவிற்கு பேருந்துக்களை வழி மரித்தவர்களை அப்புறப்படுத்தி வெளியே செல்லும் பேருந்துக்களை எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் வெளியேற்றினார்கள். இந்த பிரச்சனைகள் எல்லாம் பேருந்து நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால் வந்தது தான். எந்த ஒரு  முன்னேற்பாடும் செய்யாமல் இந்த பிரச்சனைகள் வரும் என்றும் தெரிந்தும் அலட்சியமாக இருந்ததுதான்.

ஒவ்வொரு வருடமும் இந்த பண்டிகை நாட்களில் மக்கள் படும் அவஸ்த்தைகளை போக்க, பேருந்து நிலையத்தை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும். அதாவது உள்ளே செல்ல 4 வழிகளும், வெளியே செல்ல 4 வழிகளும் மாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றினால் இனி வரும் பண்டிகை காலங்களில் பொது மக்கள் இந்த பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள்.

ஜெய்கணேஷ்

Categories: Article, November 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: