நினைவுகூருகிறோம் : ‘மக்கள் சக்தி’ டாக்டர் M. S. உதயமூர்த்தி அய்யா அவர்களை

Saturday, January 25th, 2014 @ 11:12PM

டாகடடர் எம். எஸ். உதயமூர்த்தி

டாகடடர் எம். எஸ். உதயமூர்த்தி

மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் M. S. உதயமூர்த்தி அய்யா அவர்களை லோக் சத்தா கட்சி ​நினைவுகூருகிறது.

மக்கள் சக்தி இயக்கம் மூலமும், பல்வேறு சுயமுன்னேற்ற நூல்கள் மூலமும் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் சமூக சிந்தனையை உருவாக்கி அவர்களை நாட்டின் தூண்களாய் மாற்றும் சக்தியாய் விளங்கினார்.

லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் நிறுவன தலைவர்கள், திரு. உதயமூர்த்தி ஐயா அவர்களால் ஈர்க்கப்பட்டு அவரை அரசியல் குருவாக ஏற்று அரசியலுக்கு வந்தவர்கள். இத்துடன் திரு. உதயமூர்த்தி ஐயா அவர்களுக்கு திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் எழுதிய நினைவஞ்சலியை இணைத்துள்ளோம்.

அவரை நினைவுகூரும் இந்நேரத்தில் இளைய தலைமுறையினர் திரு. உதயமூர்த்தி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சமூக முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைய வேண்டுகோள் விடுக்கிறோம்.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: