புதிய அரசியலுக்கு தேவை உள்ளூர் சாதனையாளன்!

Friday, January 3rd, 2014 @ 5:43AM

2011 தமிழக தேர்தலுக்குப் பின்னும் அதற்கு முன்னரும் லஞ்ச ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள், தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, தீவிர மதுக்கட்டுப்பாடு, ஆட்டோ மீட்டர் பிரச்னை, சட்டசபை நேரடி ஒளிபரப்ப கோரிக்கை போன்று பொதுவான பிரச்சனைகளை கொள்கை அளவிலும் சற்று உயர்மட்டத்திலும் எடுத்து தமிழக லோக் சத்தா கட்சி தீவிரமாக செயல்பட்டு வந்தது. 2012 ஆண்டு முடிவல் கட்சி செயல் பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு மாநில நிர்வாகக் குழு கூட்டப்பட்டு இரண்டு சுற்றுகளாக கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அதில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டன. கட்சியை வலுப்படுத்த மேல் மட்டத்தில் இருந்து ஊடகங்களின் வழியாக கொள்கை பரப்பும் செயல் ஒரு பகுதிதான். அதற்கு ஈடாக உள்ளூர் சாதனையாளர்கள் (Local Champions) தேவை என்பது அனைவராலும் பெரிதும் உணரப்பட்டு இருந்தது. அதுவே கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்கவும் அரசின் தவறான கொள்கைகளை அதிகம் பேர் கொண்ட ஆர்ப்பாட்டங்களின் வாயிலாக எதிர்த்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவும் என்றும் முடிவு செய்யப்பட்டது. எனவே உள்ளூர் சாதனை யாளர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளில் உள்ளூர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர மதுக் கட்டுப்பாடு கொள்கைப் பணியில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடினோம். ஊரப்பாக்கத்தில் நீதிமன்ற ஆணையின் காரணமாக நெடுஞ்சாலை மதுக்கடை ஒன்று ஊருக்குள் மாற்றப்பட இருந்தது. மக்களுடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தினோம். அது போல மயிலாப்பூரிலும் மக்களை மிகுந்த இன்னலுக்கு உள்ளாக்கிய முண்டக்கண்ணி அம்மன் கோவில் தெரு மதுக்கடைக்கு எதிராகப் போராடி மக்களுடன் கைதாகி அதை மூடச் செய்தோம்.

சென்னை நகரில் மதுரவாயல், சோழிங்க நல்லூர், மயிலாப்பூர் என பல்வேறு இடங்களில் மக்கள் உதவி முகாம்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு முகாமிலும் குவிந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு லஞ்சமின்றி அரசு சேவைகள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களின் தொடர்புகள் குறித்துக் கொள்ளப்பட்டன. அந்த தொடர்புகளைக் கொண்டே உள்ளூர் செயல்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டது. இதோடு சேவை பெறும் உரிமைச் சட்டப் பிரச் சாரம் இணைத்து துவங்கப்பட்ட போதும் உள்ளூர் தொடர்புகளை வலுப்படுத்த தொடர்புகள் குறிக்கப்பட்டன.

இது போன்ற முயற்சிகளின் பலனாக மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆர்வமுள்ள பல நூறு பேர் தொடர்பு கொண்டனர். அடுத்தக் கட்ட மாக இந்தத் தொடர்புகளை கொண்டு உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதே பகுதியில் 173வது வார்டில் வசிக்கும் மகளிர் அணி செயலாளர் வாணியின் பகுதியில் தெரு விளக்கு பிரச்சனையை நாம் முதலாவதாக கையில் எடுத்தோம். இப்பகுதி முழுவதும் உள்ள எரியாத தெரு விளக்குகள், மரக்கிளைகளினால் மறைக்கப்பட்டு வெளிச்சம் தராத தெரு விளக்குகள் உள்ள தெருக்களைக் கணக்கிட்டு ஒட்டுமொத்தமாகப் பிரச்சனையை கையாள தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

Local Champion - Street Light Issue

ஏற்கனவே பல வருடம் எக்ஸ்னோரா மூலம் செயல்பட்டு கட்சியில் இணைந்து வார்டு 173 வேட்பாளராக 2011ல் போட்டியிட்ட கோட்டூர்புரம் திரு.ரங்கநாயகலு அவர்கள் சமீபத்தில் மிக்க ஆர்வத்துடன் கட்சியில் வாழ்நாள் உறுப்பினராக இணைந்து உள்ளூர் சாதனையாளராக செயல்பட்டு வருகிறார். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான அணுகுமுறையே பலனளிக்கும் என்று அவர் முடிவு செய்ததே அதற்கு காரணம். அந்த வார்டில் குடிநீர், மின் சாரம், சாலை ஆக்கிரமிப்பு, பட்டா சம்பந்தப்பட்ட தீராப் பிரச்சனைகள் உள்ளன. இவற்றில் அப்பகுதிவாசிகள் பல பேரை பாதித்துள்ள பட்டா பிரச்சனையை நாம் தற்சமயம் கையில் எடுத்துள்ளோம். அனைவரையும் ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம். இப்பிரச்னைக்காக பல மாதங்களாக தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாக போராடி வரும் திருமதி.தேவசேனா அவர்கள் நமக்கு இதில் உறுதுணையாக உள்ளார்.

இது போன்ற உள்ளூர் செயல்பாடுகளில் நாம் காட்டும் முனைப்பும், வெற்றியும் பலரையும் உந்துவதன் மூலமும், இப்பகுதிகளில் மேலும் பல உள்ளூர் சாதனையாளர்களை உருவாக்குவதன் மூலமும் லோக் சத்தா கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

தொகுப்பு : அசோக் ராஜேந்திரன்.

Categories: Article, December 2013, Whistle
Tags: ,

2 Comments to "புதிய அரசியலுக்கு தேவை உள்ளூர் சாதனையாளன்!" add comment
Ambi
January 3, 2014 at 7:05 am

HI,

I understand that LokSatta has been there in place for a long time compared to AAP but AAP seems to be more popular among people these days even in Tamil Nadu. But, I feel both have similar ideals and approaches. Given that, I would like to see that people with local and real local experience in solving people’s problems get elected in the next elections. But, if AAP fields it’s own candidates, the votes might get split between these two good parties. I hope Lok Satta in TN forms some sort of alliance with AAP and ensures that experienced local candidates get elected.

thanks
ambi

tnlspadmin
January 4, 2014 at 2:31 pm
Leave a Reply

%d bloggers like this: