ஜெயலலிதா வழக்கில் இன்றைய நீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா கட்சி வரவேற்கிறது

Saturday, September 27th, 2014 @ 9:15PM

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு அளிக்கப்பட நீதிமன்றத் தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது. இத்தீர்ப்பு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்.

மேலும் இத்தீர்ப்பு மக்கள் மத்தியில் நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும். எனினும் இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வர 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேல்முறையீடு செய்தால் இன்னும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். இந்த கால தாமதத்திற்கு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இருந்ததே காரணம் ஆகும். இது லோக் சத்தாவின் கோரிக்கையான ‘அரசியல் தலையீடு இல்லாத சுதந்திர விசாரணை ஆணையம்’ அமைய வேண்டும் என்பதற்கு வலு சேர்க்கிறது.

மேலும் இது போன்ற பெரும் அளவிலான ஊழல் வழக்குகளை விசாரிக்க ‘சிறப்பு நீதிமன்றங்கள்’ தேவை என்னும் கோரிக்கையை லோக் சத்தா கட்சி முன்வைக்கிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: