பால் உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை நிர்ணயிப்பதில் தமிழக அரசு தலையிடக்கூடாது – லோக்சத்தா கட்சி வலியுறுத்தல்

Thursday, October 30th, 2014 @ 11:19AM

தமிழக அரசு பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை அதிகரித்துள்ளது. பசும்பாலுக்கு ரூ.5/லிட்டர் மற்றும் எருமைப்பாலுக்கு ரூ.4/லிட்டர் எனவும், விற்பனை விலையை ரூ.10/லிட்டர் எனவும் உயர்த்தியுள்ளது.
இந்நேரத்தில் அரசின் கடமைகள் என்னவென்பதை நாம் சற்று நினைத்து பார்க்க வேண்டும். அரசு இதுபோன்ற தொழில்களில் தலையிடுவது அல்லது ஈடுபடுவது அரசின் பிற முக்கிய கடமைகளில் இருந்து அதை திசை திருப்பும்.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு பால் விற்பனை விலையை உயர்த்திய போது, மாநில கால்நடை துறை அமைச்சர் அதில் அரசு தலையிடாது என அறிவித்தார்.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 5.42 % மக்களை உள்ளடக்கிய தமிழகம், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 5.29 % தமிழகத்தின் பங்களிப்பு.
மேலும் per capita availability/day எனப்படும், ஒரு நாளுக்கு தனி நபருக்கு கிடைக்கக்கூடிய பால் அளவில் தமிழகம் 11-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஹிமாசல பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்கள் தமிழகத்திற்கு மேலே உள்ளது.

Cow_female_black_white

பால் உற்பத்தியை அதிகப்படுத்தாமல் அதன் விலையை கட்டுப்படுத்துவது, உற்பத்தியாளர்களின் இலாபத்தை பாதிக்கும். மேலும் உற்பத்தியாளர்கள் தாங்களாகவே விலையை நிர்ணயம் செய்யும் பொழுது, அவர்களின் இலாபம் அதிகரிக்கும். இலாபம் அதிகரிக்கும் பொழுது முதலீடு அதிகரித்து உற்பத்தி பெருகும். தேவைக்கு அதிகமாக உற்பத்தி இருக்கும் சமயத்தில் பாலின் விலை தானாக குறையும்.

பால் விலையை நிர்ணயம் செய்வதில் இருந்து அரசு விலகினால் பாலின் விலை இதுபோன்று 3 வருடத்திற்கு ஒரு முறை திடீரென உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி தராமல் சந்தைக்கு ஏற்றாற்போல் படிப்படியாக உயரவோ குறையவோ செய்யும்.

இது போன்ற பொருளாதார மற்றும் தொலைநோக்கு பார்வையை கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழக அரசு விலை நிர்ணயிப்பதில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: