சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலையை மூடக்கோரி போராட்டம்

Friday, November 28th, 2014 @ 8:39AM

சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள ரெடி மிக்ஸ் கான்க்ரீட் (RMC) ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வண்ணமும், அந்தப் பகுதி பொதுமக்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் வண்ணமும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியும் சரியான பதிலோ, நடவடிக்கையோ இல்லாத காரணத்தால் இப்போது அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து லோக் சத்தா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

Kotturpuram-cement-plant

போராட்டக் கோரிக்கைகள்

  • ஆலையை விரைவில் மூடுவதற்கான தேதியிட்ட உறுதி மொழியை மாநகராட்சி மேல் அதிகாரிகள் நேரில் வந்து மக்களிடம் அளிக்க வேண்டும்.
  • ஆலை கனரக வாகனங்கள் எல்லை அம்மன் கோவில் வழியே செல்ல உடன் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
  • கோட்டூர்புரம் பகுதி பிற பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைக்க மாநகராட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – தேவையான நிதி மற்றும் பிற ஆதாரங்களை ஒதுக்க உறுதியளிக்க வேண்டும்.

தேதி/நேரம் : 28-நவம்பர்-14 (காலை 11 மணி முதல் 12 மணி வரை)

இடம்: NSK சிலை அருகில் (கோட்டூர்புரம் இரயில் நிலையம் அருகில்)
தொடர்புக்கு: அசோக் – 9382577264

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க ஊடக நண்பர்களையும் சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஃபேஸ்புக் நிகழ்வு: https://www.facebook.com/events/795352443858502/

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: