தென் சென்னை – ஜெய்கணேஷ்

Jai Ganesh

A. ஜெய்கணேஷ் [English profile here]

தொகுதி: தென் சென்னை

வயது: 29

கல்வித்தகுதி: BBA

முகவரி: 1/853, தனலட்சுமி வளாகம், நீலாங்கரை இணைப்பு சாலை, பிரபு நகர், துரைப்பாக்கம், சென்னை – 600097

திரு. ஜெய்கணேஷ் அவர்கள் ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர் ஆவார்.

அண்ணா ஹசாரே அவர்களின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் மூலம் ஜூன் 2011-இல் பொது வாழ்விற்கு வந்தார். ஊழலை ஒழிக்க அரசியலே சிறந்த வழி என புரிந்துகொண்டு செப்டெம்பர் 2011-இல் லோக்சத்தாவில் இணைந்தார். தன் மனைவியின் ஆதரவுடன் இப்போது முழு நேர அரசியலில் உள்ளார்.

சமூக பணிகளில் சில

  • தமிழகம் முழுவதும் ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ குறித்த விழிப்புணர்வு பைக் பயணம். இதுவரை 13 மாவட்டங்கள் நிறைவு.
  • அண்ணா ஹசாரே அவர்களின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பில் களப்பணி.
  • தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் முயற்சியில் தீவிர ஈடுபாடு.
  • தமிழக சட்ட பேரவை நிகழுவுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிய போராட்டத்தில் தீவிர ஈடுபாடு.
  • சோழிங்கநல்லூர் பகுதியில் பல ‘மக்கள் சேவை முகாம்களை’ ஏற்பாடு செய்தது.
  • அக்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகளை முன்னின்று நடத்தியது.

அரசியல் அனுபவம்

  • லோக்சத்தா கட்சியின் 2012-2013 ஆம் ஆண்டின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார்.
  • தற்போது மாநில அமைப்புச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

பிரச்சாரம்

ஜெய் கணேஷின் பிரச்சாரம் தொடர்பான செய்திகள்

%d bloggers like this: