திருப்பூர் – கோபால்சாமி

Gopalsamy

R. கோபால்சாமி [English profile here]

தொகுதி: திருப்பூர்

வயது : 38

கல்வித்தகுதி: M.Com., M.A (Yoga), PGDCA., Dip.in Acu., Dip.in Mechanical, Dip.in Gold appraising.

முகவரி: 4/37, மாதப்பூர், பல்லடம், திருப்பூர் மாவட்டம் – 641664.

திரு. கோபால்சாமி அவர்கள் தனிமனித மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்ற பணிகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இவர் காப்பீட்டுத் துறையில் 12 வருட அனுபவத்துடன் முதுநிலை விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். தற்போது திருப்பூர் மாவட்ட JCI (ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்) அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

சமூக பணிகளில் சில

  • JCI (ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்) அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு திருப்பூர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பங்காற்றியுள்ளார்.
  • வாழ்க வளமுடன் யோகா மையத்தில் தன்னார்வலர் மற்றும் பயிற்சி ஆசிரியராக பத்து வருடங்களாக பங்காற்றி வருகிறார்.
  • ஈஷா யோகா மையத்தில் களப்பணி தன்னார்வலராக ஐந்து வருடங்களாக பங்காற்றி வருகிறார்.
  • தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் பொறுப்பில் 2003 முதல் 2008 வரை செயல்பட்டுள்ளார்.
  • திருப்பூர் மாவட்டத்தில் அரசு சேவைகளை லஞ்சம் இல்லாமல் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் மக்கள் சேவை முகாம்கள் பலவற்றை முன்னின்று செயல்படுத்தியுள்ளார்.

அரசியல் அனுபவம்

  • இவர் லோக்சத்தாவின் ஆயுட்கால உறுப்பினரும், லோக்சத்தாவின் 2012-2013 ஆம் ஆண்டின் மாநில இளைஞரணி தலைவரும் ஆவார்.
  • தற்போது கட்சியின் மாநில பயிற்சி துறை செயலாளராக பங்காற்றி வருகிறார்.
%d bloggers like this: