திருச்சி – கருணாகரன்

Karunakaran

M. கருணாகரன் [English profile here]

தொகுதி: திருச்சி

வயது : 45

கல்வித் தகுதி: M.A (அரசியல் அறிவியல்)

முகவரி: பிளாட் நெ 727, பெரியார் நகர், ராஜகோபாலபுரம் வீட்டு வசதி வாரியம், புதுக்கோட்டை – 622 003

திரு. கருணாகரன் அவர்கள் சமூக பிரச்சனைகளுக்காக போராடும் போராளி ஆவார். மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க இது வரை பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது லோக்சத்தாவின் தேசிய தலைவர் டாக்டர் ஜே. பி மற்றும் தமிழக தலைவர்களின் பைக் யாத்திரை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு லோக்சத்தாவில் இணைந்துள்ளார்.

சமூக பணிகளில் சில

 • இவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்த போது இவரின் பொறுப்பில் இருந்த அரசு சேவைகளுக்கு கால நிர்ணயம் செய்து ஒரு மணி நேரம் முதல் ஐந்து நாட்களுக்குள் மக்களுக்கு சேவை கிடைக்கும்படி செய்தார். மேலும் மக்கள் தொலைபேசியிலேயே புகார்கள் மற்றும் விண்ணப்பங்களை தெரிவிக்க வழிவகை செய்தார். இது தற்போது லோக்சத்தா கட்சி முன்வைக்கும் சேவை பெறும் சட்டத்திற்கு முன்னோடியாக திகழ்கிறது.
 • காவிரி உபரிநீர் திட்டத்திற்காக கால்வாய் அமைக்க கோரி புதுக்கோட்டை, சிவகங்கை, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு மிதிவண்டி பிரச்சாரம். இந்த திட்டமானது கடலில் கலக்கும் உபரி நீரை வறட்சி மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்த வழி அமைக்கிறது. இதற்கான தீர்வு மற்றும் பிற வைகை, குண்டாறு ஆகியவற்றையும் இணைக்க இவர் விரிவான தீர்வை உருவாக்கியுள்ளார்.
 • முல்லை பெரியார் நதி விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண உண்ணாவிரதம் உட்பட பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
 • புதுக்கோட்டை நகராட்சியில் பெரியார் நகர், கம்பன் நகர் மற்றும் முத்துக்கருப்பன் நகர் ஆகிய பகுதிகளில் எழுபதிற்கும் மேற்பட்ட சாலைகளில் மூன்றரை ஆண்டுகளுக்கு சுகாதார பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டார்.
 • ‘மனித நேயர்கள் கூட்டமைப்பு’ என்னும் அமைப்பை நிறுவி அதன் மூலம் குடிநீர், பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் தீவிர பங்காற்றி வருகிறார்.

விருதுகள்/ அங்கீகாரம்

 • இவர் 1985 முதல் 2012 வரை காவல் துறைக்கு ‘சமூக பங்களிப்பு’ மூலம் உதவியதற்காக திரு. சரவண பெருமாள் ஐ.பி.எஸ் அவர்களால் சான்றளிக்கப்பட்டார்.
 • புதுக்கோட்டை சென்ட்ரல் JC’s அமைப்பு மாவட்டத்தின் சிறந்த இளைஞருக்கான விருதை 1989-இல் வழங்கியது.
 • மார்க்ஸிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டத்தின் சிறந்த இளைஞருக்கான விருது புதுக்கோட்டை இராஜகோப்பாலபுரம் கலை இரவு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

அரசியல் அனுபவம்

 • புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினராக 2001 முதல் 2006 வரை இருந்துள்ளார்.
 • கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக 2010 முதல் 2013 வரை இருந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. s.p. முத்துக்குமரன் அவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.
 • தற்போது லோக்சத்தா-வின் புதுக்கோட்டை மாவட்ட தொடர்பாளராக உள்ளார்.
%d bloggers like this: