விசில் மாத இதழ்

கட்சியின் கருத்துக்களையும், செயல்பாடுகளையும் அனைத்து உறுப்பினர்களிடமும், பொது மக்களிடமும் கொண்டு சேர்க்கும் மிக முக்கிய பணியை செய்திட விசில் இதழ் உதயமானது.

ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி அன்று நடந்த முதல் செயற்குழு கூட்டத்தில் மின்னிதழாக தொடங்கி வைக்கப்பட்டது. ஆறு மதத்தில் நல்ல வரவேற்பை பெற்று தனிச்சுற்று இதழாக அக்டோபர் மாதம் முதல் வெளி வந்துகொண்டு இருக்கிறது.

கட்சியைத் தாண்டி மக்களின் அன்றாட பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் விசில் முன்னிறுத்துகிறது.

அதே சமயம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் தொடர்ந்து கருந்துக்களை பதிவு செய்து வருகிறது.

மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டிய தேர்தல், நிர்வாக மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்த கருத்துருவாக்கத்தில் முன்னோடியாக விசில் இருந்து வருகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக ‘விசில்’ -இல் வெளிவந்த தேர்தல் முறையில் மற்றம் தேவை, ஷாக்கடிக்கும் தமிழக மின்சார நிலவரம் தொடர்களைச் சொல்லலாம்.

அரசியலால் சிக்கலாக்கப்பட்டு தீர்வு காண முடியாமல் போன முக்கிய பிரச்னைகளை கையிலெடுத்து, அதன் பின்புலம் பற்றியும், பிரச்சினையின் விளைவுகள் குறித்தும் ஒரு விரிவான பார்வையை ஏற்படுத்துவதோடு அதற்கான் தீர்வுகளையும் முன்னெடுத்து வைப்பதிலும் விசில் தனது முத்திரையை பதித்துள்ளது. இதற்கு விசில் இதழில் தொடராக வெளிவந்து இப்போது புத்தகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் என்றும் வற்றாத காவிரி அரசியல் ஒரு சிறந்த உதாரணம்.

லோக் சத்தா எவ்வாறு அனைவரும் பங்கேற்கும் அரசியலுக்கான ஒரு பொதுத் தளமாக உள்ளதோ, அதே போல் விசில் இதழும் நட்டு நலனில் அக்கறையுள்ள நீங்கள் அனைவரும் பங்கேற்று ஒரு சிறந்த அரசியல், சமூக, பொருளாதார சீர்திருத்த இதழாக தொடர்ந்து வெளிவர பங்களிப்பீர்…

விசில் இதழின் கடந்த மாத இதழ்கள்:

%d bloggers like this: